மட்டக்களப்பு - ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று(03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.
இவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.