தமிழ் மாணவர்களை இ.போ.ச பஸ்ஸில் ஏற்ற மறுத்த நடத்துனருக்கு சேவை இடைநிறுத்தம் .


நுவரெலியா பகுதியில் உள்ள தமிழ்ப் பாடசாலையொன்றின் மாணவர்களை, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு விசாரணை முடியும் வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்பட மாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.