இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும்.
இவ்வாறு
காரைதீவில்
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் ,முன்னாள் தவிசாளரும், இந்நாள் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.
இலங்கை
தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள்
அறிமுகமும் ,,ஆலய விசேட பூஜைகளும் நேற்று(28) வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ
பாலையடி வால விக்னேஸ்வர் ஆலயத்தில் நடைபெற்றது.
கிழக்கிலங்கையில்
பிரபலகுருக்களும்,ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்
முன்னிலையில் பொங்கல் பொங்கி விசேட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து வழிபாடு இடம் பெற்றன .
அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுகம் தொடர்பாக
முன்னணி வேட்பாளர் கி.ஜெயசிறில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்.
தொடர்ச்சியாக
இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றி வருகின்றது.
இம்முறையும் இலங்கை தமிழரசுக் கட்சியே காரைதீவு பிரதேச சபையில் ஆட்சி
அமைக்கும்.
அதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் அதிகப்படியான உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும்.
ஏன் என்றால் இங்கு உண்மையான உணர்வுள்ள தமிழர்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள் இனம் சார்ந்த நிலம் சார்ந்து சிந்திக்கின்றார்கள். எமது மக்களை எமது மக்கள்தான் ஆள வேண்டும்.
சிலர் இன்னும் பெரும்பான்மை கட்சிகளோடு இணைந்து எம் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் . இந்த கோடரிக்காம்புகளால்
கடந்த கால அனுபவங்கள் போதாதா?
சிந்தித்து பாருங்கள்.
எந்த அமைச்சர் வந்து இங்கு என்னத்தை செய்தார்?
நேற்று முன்தினம் கூட ஒரு அமைச்சர் வந்தார். இவர்களால் என்ன செய்ய முடியும்?
இவர்களது
அபிவிருத்தி என்ற மாயையும் கசப்பு வார்த்தைகளையும் நம்ப காரைதீவு மக்கள்
ஒருபோதும் தயார் இல்லை என்பதை எதிர்வரும் மே மாதம் ஆறாம் தேதி
எடுத்துக்காட்டுவார்கள்.
நாம்
தூய்மையான அரசியலை முன்னெடுத்து நிலையான அபிவிருத்தியை நோக்கி எமது இருப்பை தக்க வைக்கும் நோக்கில் செயற்படுவோம். என்றார்.
ஏனைய வேட்பாளர்களும் பெருந்தொகையான ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர்.
( வி.ரி.சகாதேவராஜா)