பொய்யான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க எதிர்ப்பார்ப்பதாக களுத்துறை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி நிலாந்தி கோட்டஹச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊடகங்களின் தரத்தினை பேனுவது அரசின் கடமையாகும்.ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்புகள் தொடர்பில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.ஊடகவியலாளர்கள் அதன் ஆழ அகலங்களை அறிந்துகொள்ளவேண்டும்.குற்றவியல் சட்டத்தில் பொய்யான தகவல்களை வழங்கக்கூடாது என கூறப்பட்டாலும் நடைமுறையில் அது நடப்பதில்லை பொய்யான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க எதிர்ப்பார்ப்பதாக களுத்துறை மாவட்ட உறுப்பினர் திருமதி நிலாந்தி கோட்டஹச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.