பிள்ளையானுடன் இணைந்து கொண்டார் கருணா அம்மான் - தமிழர் இருப்பை பாதுகாக்க படகு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கருணா அம்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

 


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான கனவான் ஒப்பந்தம் இன்று 22.03.2025 மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கைசாத்திடப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம், பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன்,  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் தெய்வநாயகம் செந்தூரன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.