சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட இஷாரா செவ்வந்தி கடல் மார்க்கமாக படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளாரா ?

 


பிரபல பாதாள உலக தலைவன் கணேமுல்லை சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட இஷாரா செவ்வந்தியை விசாரணை அதிகாரிகள் சுமார் 200 இடங்களில் சோதனை செய்த போதிலும் அவர் குறித்த சாதகமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களின்படி, சந்தேக நபர் கடல் மார்க்கமாக படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இஷாரா செவ்வந்தி தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால், அவர் செல்லும் பாதை அல்லது தற்போதைய இடம் பற்றிய தடயங்கள் எதுவும் இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கணேமுல்லையில் சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இஷாரா களுத்துறையில் உள்ள தங்க நகைக்கடை ஒன்றிற்குச் சென்று சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை வாங்கிச்சென்றுள்ளதாக   பொலிஸ் விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, அவளைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் வரவில்லை.

தற்போதைய சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகநபர் தென் மாகாண கடற்பகுதியில் படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

 சுபீட்சம்