சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின






நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் இன்றும்  கட்டுப்பணம் செலுத்தின.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி , ஏறாவூர் நகர சபைகள் உட்பட ஆறு சபைகளில் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் எம்எல்ஏஎம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தினார்.

ஏற்கனவே இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும் சர்வஜன பலய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சாலி சாபி தலைமையிலும்,ரீஏம்விபி கட்சியின் செயலாளர் பி.பிரசாந்தன் தலைமையிலும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

  (ரீ.எல்.ஜவ்பர்கான் )