மலசலகூடத்திற்குள் போதைப்பொருள் அருந்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

 


அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் மலசலகூடத்தில் போதைப்பொருள் அருந்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுர தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 39 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மலசலகூடமொன்றில் போதைப்பொருள் அருந்துவதாக தலைமையக பொலிஸ் பரிசோதகர் திரு.ஆர்.எம்.ஜெயவீரவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த பொலிஸ் கான்ஸ்டபிள்  ஐஸ் வகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்