கிழக்கு மாகாணத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் பல செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது- அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன்


 






  வரதன்

 

 

ஜனாதிபதியின் பணிபுறையின் பெயரில் கிழக்கு மாகாணத்தில் பெண்கள்  தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் பல செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது- மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன்
ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம் பெற்ற மாவட்ட செயலாளர்களுடனான  கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மீலாய்வு கூட்டத்தின் போது

 புதிய அரசாங்கத்தினால் இம்முறை சர்வதேச மகளிர் தினம் கிழக்கு மாகாணத்தில் பெண்கள்  தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையில் பல செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது


 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகத்தினால் இம்முறை ஜனாதிபதியின் பணிபுறையின் பெயரில் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மிகவினைத்திறன் உடைய வகையில் முன்னெடுக்கப்பட உள்ளன


மாவட்ட சம்மேளன பிரதிநிதிகளுக்கான தேசிய மகளிர் தின அங்குராட்ப்பன வார நிகழ்வு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ் பிரணவன் தலைமையில் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது


இதன் ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டு மாவட்ட செயலகத்தினால் எதிர்காலத்தில் பெண்களுக்காக முன்னெடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக எடுத்துரைத்தார்


நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திட்ட உயர் அதிகாரிகள் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பயனாளிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்