யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்று பதவியேற்றதை தொடர்ந்து, கனடாவின் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில், யாழ்ப்பாணத்தில் பிறந்த கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், ஒன்டாரியோ மாகாணத்தின் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாக கரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின்சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னதாக, கனடாவின் நீதி அமைச்சர் மற்றும் அட்டர்னி ஜெனரலின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டவர், தற்போது கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.