கடந்த
தேர்தல்களில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாத ஒரு
தத்தளிக்கும் ஒரு அரசாங்கமாக இன்றைய அரசாங்கம் காணப்படுகிறது.
அதற்குள் இன்னும் உள்ளூராட்சி அதிகாரம் தேவையாம்!
இவ்வாறு
அம்பாறையில் நடைபெற்ற உள்ளூராட்சி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்
பிரேமதாசா பரிகாசம் செய்தார்.
இந்த அரசாங்கத்துடைய பொய்ப்பித்தலாட்டங்களையும் ஏமாற்று வேலைகளையும்
பொய்யான வாக்குறுதிகளையும் இன்று வீதிக்கு இறங்கும் பொழுது அனைத்து
மக்களுடைய வாய்களிலும் கேட்கக் கூடியதாக இருக்கிறது.
என்றார்.
அம்பாறை
மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக உள்ளுராட்சி மன்றங்களில்
போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அமைப்பாளர்களும் கலந்து கொண்ட இக்
கூட்டம் அம்பாறை றன்பிம ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம் பெற்றது.
இந்த
ஒன்று கூடல் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக உள்ளுராட்சி
மன்றங்களில் போட்டியிடும் அனைத்து பிரதேச சபை நகர சபை மாநகர சபைகளுக்கான
அனைத்து வேட்பாளர்களும் கிட்டத்தட்ட 400 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் இதிலே
கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அதன் அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் கலந்து கொண்டனர்.
இந்த
நிகழ்வில் மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய சஜித்
பிரமதாஸ ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார
ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
அங்கு சஜித் பிரமதாஸ மேலும் பேசுகையில்..
மக்களுக்கு
உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கக்கூடிய இவர்கள்
தற்பொழுது உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரத்தையும் கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள். இன்னும் அதிகாரங்களை கேட்கிறார்களே தவிர அவர்களால்
மக்களுக்கு எந்த விதமான நலத்திட்டங்களும் இடம்பெறுவதாக இல்லை .
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. அதே நேரத்தில் நீதித்துறைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்திற்குள்
கொலை செய்கிறார்கள் .அப்படி அந்த கொலையாளிக்கு உடந்தையாக இருந்த அந்தப்
பெண்ணை கூட அவர்களால் தேடி கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. இன்று
பொலிஸ்மா அதிபரை கண்டுபிடிக்க முடியாமல் அவரே அவரது வாகனத்தில்
வந்துகொண்டிருக்கிறார்.
அவர் தனக்கு விருப்பமான ஒரு வாகனத்தில் வந்த இறங்குகிறார்.
இப்படி
சட்டங்களை ஒழுங்குகளை பாதுகாப்பு கூட காத்துக் கொள்ள முடியாத
அரசாங்கமாகவும் விலைவாசிகள் வானளாவ தொடும் அளவுக்கும் உயர்ந்திருக்கிறது.
இப்படி
மக்களுக்கு எந்த விதமான அனுகூலங்களும் இல்லாத அரசாங்கமாக இந்த அரசாங்கம்
மாற்றப்பட்டு உள்ளமை. அது மாத்திரமல்ல அனைத்து உள்ளாட்சி மன்றங்கள் உடைய
வேட்பாளர்களும் சிறந்த முறையில் போட்டியிட்டு இம்முறை அனைத்து சபைகளையும்
நாங்கள் பெறுவதற்கான முயற்சி எடுக்க வேண்டும் .வெற்றி அடைய வேண்டும் .
இம்முறை
ஐக்கிய மக்கள் சக்தியானது முதல் முறையாக இலங்கையில் காணப்படக்கூடிய
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது
இதுவே முதல் தடவை. ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில் அதனா வயது ஐந்து
வயது ஆகிறது . 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாக
ஐக்கிய மக்கள் சக்தி பாரிய மூன்றுக்கும் மேற்பட்ட தேர்தல்களை சந்தித்து
இருக்கிறது .
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக ஜனாதிபதி
தேர்தலில் இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டதுடன் பாராளுமன்ற தேர்தலில்
பிரதம எதிர்க்கட்சியாகவும் வெற்றி கண்டது.
அதேபோல ஏற்கனவே 2020 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக தன்னை தக்க வைத்துக் கொண்டிருந்தது.
எனவே
இந்த தேர்தல்களை பிரதேச சபைகளுக்கான எந்தவிதமான மந்திரிகளோ உறுப்பினர்களோ
இல்லாமல் தான் எமது கட்சி தனித்து தான் போட்டியிடுகிறது.
எமது
கட்சி இம்முறை தான் பிரதேச சபைகளுக்கான தேர்தலை தனித்துப்
போட்டியிடுகிறது. எனவே இம்முறை உருவாகக்கூடிய ஒவ்வொரு உறுப்பினர்களும்
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்பதில் பெருமை கொள்ள வேண்டியதொன்றாக
அமையும் . வாழ்த்துக்கள்.