கதிரவனின் பெண்கள் தினம் கதிரவெளியில்.






















கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு வாகரை- கதிரவெளி மற்றும் புதூர் கிராமங்களில்  08.03.2025 கதிரவன் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதான அம்சமாக கதிரவன் ரசிகர் திரு சேகலாதன் அருளம்பம் அவர்களின் அனுசரணையில், கதிரவெளி கதிரொளி கலைக் கழக ஒழுங்குபடுத்தலில், மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் விழிப்புணர்வு வீதி நாடகம் இடம்பெற்றது.

போதையற்ற சமூகம் வன்முறையற்ற குடும்பம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கதிரவனின் விழிப்புணர்வு வீதி நாடகத்தில் இளம் வயது திருமணம், பாடசாலை இடை விலகள்,குடும்ப வன்முறை, போதைப் பொருள் பாவனை,பகிடிவதை, முறையற்ற தொலைபேசிப் பாவனை முதலான இன்னோரன்ன  விடயங்கள் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மற்றும் புதூர் கிராமங்களில் நடைபெற்ற இந்நிகழ்வினை பார்வையிட அதிகளவான மக்கள் ஒன்று கூடியதுடன் இது போன்ற நிகழ்வுகள் அனைத்து கிராமங்களிலும் நடைபெற வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

கதிரவன் கலைக்கழகத்தின் கதிரவன் விழிப்புணர்வு வீதி நாடக குழுவினர் 20 ஆண்டுகளாக இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 2000 இக்கும் மேற்பட்ட வீதி நாடகங்களை 250 க்கு மேற்பட்ட கிராமங்களில் நிகழ்த்தி இருக்கின்ற அதேவேளை இந்நிகழ்வுகளுக்கு அரச - அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அனுசரணை வழங்குகின்றமை விசேட அம்சமாகும்.