அம்பாறை மாவட்டம் காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதேசத்தில் ‌ தொடர்ந்தும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

 

 







காரைதீவு மாவடிப்பள்ளி பிரதேசத்தில் காட்டு யானைகள் சஞ்சரிக்கும் காட்சிகளே இவை!   அம்பாறை மாவட்டத்தில் அண்மை காலங்களாக  காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு,  மாவடிப்பள்ளி பிரதேசத்தில் ‌ தொடர்ந்தும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

காரைதீவு, மாவடிப்பள்ளி வயல் பிரதேசத்தில் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ள காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் இதனால் தங்களது விவசாய  நடவடிக்கையினை  மேற்கொள்ள முடியாமல் அச்சத்துடனே இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் வேளாண்மை அறுவடை  நிறைவடைந்துள்ளதையடுத்து சுமார் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிலை கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள்  மேலும் தெரிவித்தனர்.

 யானைகளை காட்டுப்பகுதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு முன் வர வேண்டும் எனவும்  மாவடிப்பள்ளி, காரைதீவு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.