கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் மக்களின் வரிப்பணத்தில் சுகபோகங்களை அனுபவித்தனர் - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர

 


 

எமது அரசாங்கம் ஜனநாயக ரீதியில் பயணிக்க உள்ளது  மக்கள் ஆணை மூலம்  மாற்றம் கிடைத்துள்ளது இருப்பினும் கடந்த கால அரசாங்கங்களின் எச்சங்கள்  எமக்கு தெரிகின்றன  தற்போது வாழ்க்கைச்  சுமைகள் குறைவடைய தொடங்கியுள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர


எமது அரசாங்கத்தின் பயணமானது நீண்ட தூரம் ஜனநாயக ரீதியில் பயணிக்க உள்ளது நமக்கு மக்கள் ஆணை மூலம் ஒரு பாரிய மாற்றம் கிடைத்துள்ளது

இருப்பினும் ஆங்காங்கே சில கடந்த கால அரசாங்கங்களின் எச்சங்கள்  எமக்கு தெரிகின்றன எமக்கு மக்களின் மாற்றங்கள் தான் முக்கியம் தற்போது வாழ்க்கைச்  சுமைகள் குறைவடைய தொடங்கியுள்ளன

 அதற்கு காரணம் ஊழல் மோசடி அற்ற அரசியல் கலாச்சாரம் தான் காரணம் கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் மக்களின் வரிப்பணத்தில் சுகபோகங்களை அனுபவித்தனர்

ஆனால் இப்போது அவ்வாறு இல்லை வறிய மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப் படவே நாம் எமது செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்

 வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவியுடன் நல்லிணக்கம் கட்டி எழுப்பப்பட்டு எல்லாரும் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் கட்டி எழுப்ப வேண்டுமெனஎன பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர  மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

 

 வரதன்