FREELANCER
"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மார்ச் 2-8 வரை தேசிய நிகழ்ச்சி திட்டமாக கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய "ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு ஒரு பலம் " எனும் இன்றைய தொனிப்பொருளுக்கமைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சுதாகரன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் பெண்கள் அபிவிருத்தி நிலைய பெண் பயிலுனர்களுக்கான உள் சுகாதார மற்றும் தொழில் சந்தை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று(4.3.2025) இடம்பெற்றது.இந்நிகழ்வு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் , விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து நடாத்தப்பட்டது. இதில் மாவட்ட கிராம் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.