மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கனடா சாகி இல்லத்தினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வாழைச்சேனை கண்ணகிபுரம் முதியோர் சங்க கட்டிடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது வாழைச்சேனை கண்ணகிபுரத்திலுள்ள கணவனை இழந்து மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற அறுபது குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக கனடா சாகி இல்லத்தினால் வழங்கிய ஒரு இலட்சம் நிதியுதவியினை கொண்டு மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஊடாக வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற உதவி வழங்கும் திட்டத்தில் பேரவை உறுப்பினர்களான சா.யோகநாதன், எஸ்.புவிதரன், எஸ்.பவிசாந்த், எஸ்.குகன், கண்ணகிபுரம் முதியோர் சங்க தலைவர் எஸ்.நமசிவாயம், செயலாளர் திருமதி.எஸ்.கங்காதேவி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.