கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உணவு பரிசோதனைநடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது

 









 மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்  வைத்தியர் ஆர். முரளீஸ்வரனின் எண்ணக்கருவில் உருவான " அனைவருக்கும் சுத்தமான உணவினை கொடுப்போம்"  என்னும்  தொனிப்பொருளில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை    கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உணவு பரிசோதனைநடவடிக்கை  ஒன்று மேற்கொள்ளப்பட்டது  

அந்தவைகயில் வாரா வாரம் இயங்கி கொண்டிருக்கும் கிரான் வாராந்த பொது சந்தையில் சுகாதார வைத்திய அதிகாரி  எஸ். சிவலக்சன் தலமையில்  உணவு பரிசோதனைநடவடிக்கை  ஒன்று மேற்கொள்ளப்பட்டது .

இவ் நடவடிக்கையின் போது மக்களின் பாவனைக்கு உதவாத பொருட்களை வியாபாரம் செய்த குற்றத்திற்காக  08 பேருக்கு சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதுடன்   பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டு  அவர்களின் முன் அழிக்கபட்டதுடன்  ஒரு சில வியாபாரிகளுக்கு  கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இவ் நடவடிக்கையில் மேற்பார்வை பொதுச்சுகாதார  பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதார  பரிசோதகர்கள் கலந்து   கொண்டர்.