சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பிய நிலையில், அவரது பூர்விக ஊரான இந்திய நாட்டில் உள்ள குஜராத்தின் மெஹ்சானாவில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கும், இந்தியாவுக்கு இடையே உள்ள உறவுகள் குறித்து, முக்கியமான சுவாரஸ்யமான தகவல்கள் பின்வருமாறு:
* சுனிதா வில்லியம்ஸின் தந்தை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெயர் தீபக் பாண்டியா.
* இவருக்கு சொந்த ஊர் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமம்.
* நரம்பியல் விஞ்ஞானியான சுனிதாவின் தந்தை 1957ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அமெரிக்கரான உர்சுலின் போனியை மணந்தார்.
* இந்த தம்பதியினருக்கு செப்டம்பர் 19ம் தேதி, 1965ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.
* குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தில் 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராம மக்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்தின் மீது அதிக அன்பும், பாசமும் உள்ளது.
* விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பியதை அறிந்து மொத்த கிராமம் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளது.
* இந்த கிராமத்தில் சிறிய நூலகம் ஒன்று உள்ளது. இதற்கு சுனிதா வில்லியம்ஸின் தாத்தா, பாட்டியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* கடந்த காலத்தில் விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக முடித்த பிறகு வில்லியம்ஸ் தந்தையின் சொந்த கிராமமான ஜூலாசனுக்கு மூன்று முறை பயணம் செய்துள்ளார்.
* அவர் ஒருமுறை சென்றபோது, தனது மூதாதையர் ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கு நிதியுதவி அளித்தார். அந்தப் பள்ளியின் பிரார்த்தனை மண்டபத்தில் அவரது தாத்தா பாட்டியின் புகைப்படம் இன்னும் உள்ளது.
குஜராத் கிராம மக்கள் சொல்வது இதுதான்!
சுனிதா வில்லியம்ஸின் உறவினர் தினேஷ் ராவல் கூறியிருப்பதாவது:
இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பாதுகாப்பான தரையிறக்கத்திற்காக இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தோம்.
கடந்த ஒன்பது மாதங்கள் எங்களுக்கு எளிதானவை அல்ல. நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். சுனிதா மிகவும் துணிச்சலானவர் என்று தெரிவித்துள்ளார்.
வில்லியம்ஸின் மற்றொரு உறவினர் நவீன் பாண்டியா