உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலகங்களிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

 

வரதன்



 

 

உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் கிழக்கு மாகாணத்தில் சகல மாவட்ட செயலகங்களிலும் விசேட  அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


மட்டக்களப்பு நகரில் இன்று உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி  தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது ,   நகரின் முக்கியமான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டு இருந்தனர்..  இதேவேளை வேட்பு  மனுக்களை தாக்கல் செய்யும் பழைய மாவட்ட செயலகத்தை அண்டிய வளாகங்கள் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது


தேர்தல் கடமைக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த ஊழியர்கள் மாத்திரம் உட்  செல்ல அனுமதி அனுமதிக்கப்பட்டிருந்தனர்  வேட்பு   மனுக்களை தாக்கல் செய்யும் பெறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு விசேட அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னரே மாவட்ட செயலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்


அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள்  குறிப்பிட்ட பிரதேசத்திற்கு அப்பால் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை இன்றைய இறுதி தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலகத்துக்கு  வரும் வாகனங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உட் செல்ல அனுமதிக்கப்பட்டன விசேட வீதி போக்குவரத்து நடமாடும் போலீசாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்