பாதாள உலகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் அனைத்து பாதுகாப்புப் பணியாளர்கள் குறித்தும் உளவுத்துறை அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.. பொலிஸ் மற்றும் ஆயுதப்படையின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் நடத்திய உரையாடல்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், கடந்த காலங்களில் பணியில் அமர்த்தப்பட்ட சில பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் பாதாள உலகத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கிடைத்து வருவதால் அது தொடர்பிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும், பாதுகாப்பு உறுப்பினர் ஒருவருக்கு பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.