தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட வரைபு ஒன்றை உருவாக்கும் விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக சட்ட மா அதிபர், உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
எனினும் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கான வாக்களிக்கும் உரிமைகளை வழங்குவது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.