மட்டக்களப்பில் அவதானமின்றி வீதியைக் கடக்கமுற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் நேற்று வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்