கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர ஆகியோருடன், மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு சுமூகமான சந்திப்பு திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இங்கு, சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமூகங்களும் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.