மட்டக்களப்பில் தொழில் துறையில் சாதனை படைத்து வரும் சிறந்த இளம் தொழில் முனைவர் ஜெபி ஜெனார்த்தன் அவர்களுக்கு "சாதனைத் தமிழன்" விருது வழங்கப்பட்டது .

 


இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் Top 100 விருது வழங்கும் விழா 15.03.2025 திகதி கண்டி மாநகரில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து உமா தீபன் தலைமையில் கண்டி மாநகரில் உள்ள சம்பத் மண்டபத்தில்  இடம்பெற்ற விருது வழங்கும் விழாவின்போது ஊடகவியலாளரும் இளம் தொழில்  முனைவருமாகிய ஜெபி ஜெனார்த்தனுக்கு  "சாதனைத் தமிழன்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வின் போது தேசிய ரீதியில் சமூக சேவையாற்றிவரும் மத குருமார்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரச துறைசார் அதிகாரிகள், சிறந்த இளம் தொழில் முனைவோர் போன்ற மேலும் பல துறைகள் சார்ந்து சமூகத்திற்காக சேவையாற்றிவரும் 100 சாதனையாளர்கள் Top 100 விருது வழங்கும் விழாவின் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னால் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் ஆகிய இருவரும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் துரைமனோகரன், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ, பிரஜைகள் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஆர்.ஜே.ராஜபக்ஷ (ஜேபி), முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத இணைப்பாளர் ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, சங்கவி பிலிம்ஸ் பிரைவட் லிமிட்டட்டின் உரிமையாளர் துரைராஜா சுரேஸ், நந்தவனம் சந்திரசேகரன், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம உதவி ஆசிரியர் கே.ஈஸ்வரலிங்கம், பிரபல சமூக சேவையாளர் கலாபூஷண், தேசபந்து டீ.ஜி.துலித் சாந்த ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித் திருந்தனர்.

நாட்டின் நாலாப் பகுதியில் இருந்தும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு இவ்வுயரிய விருதைப் பெற்றுக் கொண்டதுடன், இந்நிகழ்வின் போது நிகழ்வின் ஏற்பாட்டாளர்களினால் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பில் தொழில் துறையில் சாதனை படைத்து வரும் சிறந்த இளம் தொழில் முனைவர் ஜெபி ஜெனார்த்தன் உள்ளிட்ட மேலும் பலர் சமூக சேவை துறை சார்ந்து சாதனை படைத்தமைக்காக விருதினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்தென்பதுடன், மற்றுமொரு தேசிய விருதிற்காக இளம் தொழில் முனைவர் ஜெபி ஜெனார்த்தன் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.