சர்வதேச மகளிர் தின தேசிய நிகழ்ச்சி மற்றும் தேசிய வாரத்தினை முன்னிட்டு ஆரோக்கியமான பெண்கள் தேசத்திற்கு பலம் எனும் தொனிப்பொருளில் உடல் உள ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு (06) காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் தலைமையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் வளவாளர்களாக வைத்தியர்களான எஸ்.டயான், லுபோஜிதா கமல்ராஜ், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.நசீர்தீ்ன் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனுஜா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றஊப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பீ.ஜெயராஜ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் தொழுநோய் தொடர்பாகவும் தொழு நோய் எவ்வாறு ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள், அதனை இலகுவில் கண்டறிந்து குணமடைவதற்கான வழிகள், தொழுநோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை பெறும் இடங்கள், தொழுநோய் தொடர்பான தெளிவூட்டல்கள், ஆலோசனைகள் பெறுவதற்கான தொலைபேசி இலக்கங்களும் (0774704286) வழங்கப்பட்டன.
உத்தியோகத்தர்களாகிய நாங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். களவிஜயங்களை மேற்கொள்ளும் போதும் நிகழ்வுகளை நடாத்தும் போதும் தொழுநோய் சம்பந்தமான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.