இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் மத்திய மலைநாட்டின் கம்பளை பகுதியில் அமைந்துள்ள அம்புலுவாவா மலையில் அறிமுகமாகிறது.
இந்த திட்டம், அம்புலுவாவா பல்லுயிர் வளாகத்திலிருந்து அம்புலுவாவா விவசாய கோபுரம் வரை 1.8 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாகும். சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. சீனத் தூதர் குய் ஜென்ஹோங் மற்றும் அம்புலுவாவா அறக்கட்டளையின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரத்ன ஆகியோர் அண்மையில் அம்புலுவாவாவைச் சென்று இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பார்வையிட்டனர்.
இந்த கேபிள் கார் திட்டம், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து, அம்புலுவாவா பிரதேசத்தின் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.