சுதா கொங்கரா இயக்கும் “பராசக்தி” திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உட்படப் படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்ததாகச் சுதா கொங்கரா தெரிவித்திருந்தநிலையில், பராசக்தியின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது.