போப் பிரான்ஸில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் .

 


போப் பிரான்ஸில்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில்  இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இருப்பினும்  2 மாதங்கள்  கட்டாயமாக  ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார் 

இந்நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளார்