கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (14) இடம் பெற்றது.
2025 ஆண்டிற்கான முதலாவது காலாண்டிற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூடத்தில்
ஏழு வருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்ற கொள்கையை துரிதமாக மேற்கொள்வதற்கு அரசாங்க அதிபரினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
மேலும் மண் அகழ்வு, முதியோர் கொடுப்பனவுகள், வடிகாலமைப்பு, ஆறுகளை ஆழமாக்குதல், குடிநீர் வழங்கள் போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் (காணி) கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.ரோபட், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ் . சசிகரன், பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஷ், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், கணக்காளர் எம்.வினோத் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.