களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பேராசிரியர் டாக்டர் என்.டி.ஜி. கயந்த, மத்திய அதிவக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
46 வயதான கயந்த பயணித்த வேன் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியதில் படுகாயம் அடைந்த பேராசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார். அவரது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பேர் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து மீரிகம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.