' மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்றார் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள். தற்காலத்தில் 'குடும்பத்தின் குலவிளக்கு' என்றும் ' பெண்களே கண்கள்' என்றும் ' பெண்ணே முதுகெலும்பு ' என்றும் பல்வேறு அடைமொழி கொடுத்துப் பெண் பாராட்டப்படுகின்றாள். அந்த வகையில் நாட்டினைக் காக்க மன்னன் எப்படித் தேவையோ வீட்டினைக் காக்க நிச்சயம் ஒரு பெண் தேவை. வீட்டிற்குள் பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை தலை சாய்ந்து விட்டார்' என்றும் ' அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்றும் கூறி புதுமைப் பெண்ணைப் படைத்து விட்டார் பாட்டுக்கொரு புலவன் பாரதியார். ஆம், பெண் உண்மையில் கண்ணுக்கு நிகரானவள் தான். அப் பெண்ணானவள் தனது வீட்டிற்குச் செய்யும் அர்ப்பணிப்பான சேவையினாலும் நாட்டிற்குச் செய்யும் சேவையினாலும் விண்போல் உயர்ந்து நிற்கிறாள். என்பதனை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
1789ம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சியின் போது பாரிஸ் நாட்டில் பெண்கள் முதன்முதலாக போர்க் கொடி உயர்த்தினர்.உரிமைக்காகவே இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உழைப்பிற்கேற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் 16 மணி நேர சேவையைக் குறைக்க வேண்டும் என்றும், வாக்குரிமை கேட்டும் அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவி 1900ம் ஆண்டு பெண்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்பட்டு 1907 க்கு பின் பெண்கள் போராட்டம் தீவிரமடைந்தது. டெர்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 1910ம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டில் ஜேர்மனியைச் சேர்ந்த 'கிளராஜெட்கின்' எனும் பெண்மணி அனைத்து நாடுகளிலும் உள்ள பெண்கள் சேர்ந்து மகளிர் தினம் ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். பெண்களுக்கும் ஆண்களைப் போன்று வாக்குரிமை வழங்க வேண்டும், சம உரிமை வேண்டும் எனக் கேட்டு போராட வேண்டும். எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையானது 1975ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினமாக மார்ச் 08 ம் திகதியை அனுட்டிப்பதற்கு தீர்மானித்தது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் 1977 இல் இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்றுவரை மார்ச் 08ம் ஆசானாக, தாதியாக, அடிமையாக, ஊதியத்தைப் பெற்றுக் கொடுப்பவளாக, பாட்டியாக, மாமியாக என்று பல்வேறு பரிணாமங்களைப் பெறுகின்றாரள். ஒரு பெண்ணுக்கு நிம்மதியான உறக்கம் எப்போதெனில் உடலை விட்டு உயிர் பிரிந்தபின் உறங்கும் உறக்கமே உறக்கமாக காணப்படுகிற்னது. கருவிலிருந்து கல்லறை வரை ஒரு பெண் கடமை செய்து கொண்டே இருக்கின்றாள். பத்து மாதம் கருவிலே சுமக்கும் போது அவள் படும் வேதனைகள் சோதனைகள் ஏராளம். பெற்ற பின் பாலூட்டி தாலாட்டி சீராட்டி வளர்ப்பதில் சுமக்கும் சுமைகள் ஏராளம். பிள்ளை வளர உணவு சமைத்துக் கொடுப்பதிலும் ஊட்டுவதிலும் ஏற்படும் சிரமம்,கல்வி புகட்டுவதிலும் உள்ள சிரமம் இன்றைய காலகட்டத்தில் பிரத்தியேக கல்வி கட்டாயம் என்ற நிலை தோன்றி விட்டது. வேலைக்குச் செல்லும் பெண்ணும் பிள்ளையை ஏற்றி இறக்ககிறாள். வீட்டில் இருக்கும் பெண்ணும் பிள்ளையை ஏற்றி இறக்குகிறாள். வீட்டில் இருக்கம் பெண்ணை விட உத்தியோகம் பார்க்கும் பெண் இரட்டைச்சுமையை அனுபவிக்கிறாள். அதிகாலையில் எழுந்து பாத்திரம் துலக்கி வீடுவாசல் பெருக்கி, உணவு சமைத்து, பாடசாலைக்கு பிள்ளையயை அனுப்பி விட்டு வேலைக்குச் செல்லும் கணவராக இருந்தால் அவருக்குத் தேவையான அத்தனை அலுவல்களையும் கவனித்து விட்டு காலை உணவு உண்ண நேரமின்றி பதறப் பதற காரியாலயம் நோக்கி பயணிக்கின்றாள். காரியாலயத்தில் மூளைக்கு வேலை கொடுத்து உள்ளமும் சோர்ந்து உடலும் சோர்ந்த நிலையில் வீட்டிற்குப் பின்னேரம் வந்தால் அப்பாடா என்று கதிரையில் இருக்க முடியுமா? இல்லை அல்லோல கல்லோலமாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கும் வீட்டை ஒழுங்குபடுத்தி கூட்டிப் பெருக்க வேண்டும். பின்னேரம் தேநீர் காப்பி போடவேண்டும். அலங்லோகமாக காட்சியளிக்கும் அடுக்களையை சுத்தம் செய்து குசினியை ஒழுங்காக்க வேண்டும். அதன்பின் இரவுச் சமையல், அதற்குப் பின் பிள்ளைகளுக்குப் பாடம் புகட்டலும் படிக்கவும் வழிசமைத்தல், கடவுள் வழிபாடு, இரவு உணவு பரிமாறல், பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்தல், எப்படியோ இரவு 10.30 மணி தாண்டிய பின்னர் ஓரளவு வேலை முடியும். அதன் பின்னர் கூட காலையில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளைத் தயார்படுத்தல் வேலை. படுக்கையில் கூட நிம்மதியோ பெண்ணுக்கு அதுவும் இல்லை. அப்படியே சுமைதாங்கியாக வாழ்பவளே பெண். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரளவு ஓய்வு கிடைத்தாலும் கூட அவர்களும் ஓய்யாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறாள். ஐயோ பாவம் என்று சொல்லும் கணவன்மார் எத்தனை பேர் உள்ளனர். பாதி வேலையை பொறுப்பேற்றுச் செய்யும் கணவன்மார் எத்தனை பேர் உள்ளனர்? பாதி வேலையை பொறுப்பு ஏற்கா விட்டாலும் கூட
உழைத்து அனுப்பும் ஊதியத்தில் உல்லாசமாய் பொழுதுபோக்குபவர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் உள்ளத்தால் திருந்தும் நாள் எந்நாளோ தெரியவே தெரியாது.
ஆண்களை மட்டும் குறைகூற முடியாத நிலையும் காணப்படுகிறது. பெண் பெண்போல் வாழாத நிலையிலும் பல பெண்கள் உள்ளனர். ஒரு தாய் தான் குடும்பத்தை தாங்கும் பொறுப்பை நிச்சயம் ஏற்க வேண்டும். அன்பாக அரவணைப்பவளாக இருக்க வேண்டியவள் தாய் தான். ஆனால் இன்று இந்நிலை மாறுபட்டுக் கொண்டு வருவது கண்கூடாகும். கையடக்க தொலைபேசியை நேசிக்க தொடங்கிவிட்டனர். முகநூலில் முழ்கி விட்டனர். பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டிய பெண்கள் உணவைத் தேடி உணவகத்தை நாடிச் செல்லும் காட்சி அதிகரித்து விட்டது. தாயின் கையில் சமைத்த சாப்பாடு எப்போ கிடைக்கும் என்று ஏங்கி இருக்கும் பிள்ளைகளும் எம்மத்தியில் இருக்கின்றனர். வாகனம் ஓடத் தெரியவேண்டியது இன்றைய உலகின் கட்டாய தேவைதான். ஆனால், சில பெண்கள் பிள்ளைகளை மேலதிக வகுப்பிற்கு ஏற்றி இறக்கச் செல்லும் வேளையில் வீணாக சுற்றித் திரிந்து பல அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலையும் தோன்றி உள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம், சிக்கல், சந்தேகம் என பல சமூகப் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே ஒவ்வொரு பெண்ணும் தனக்கு உள்ள பொறுப்பு என்ன? தனக்கு உள்ள கடமை என்ன? இதனை நான் பூரணமாக நிறைவேற்றுகின்றோனா? நான் விடும் தவறுகள் என்ன என்று சிந்தித்து தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
எது எவ்வாறு இருந்த போதும் 'பெண் பொறுமையின் சின்னமே' என்பது வெள்ளிடைமலையாகும். பொறுமைக்கு மிக பொருத்தமாகக் கூறப்படும் பூமியைக் கூட பூமாதேவி என்றே அழைக்கின்றனர். சிவனுக்கு ஒரு ராத்திரி சக்திக்கு ஒன்பது ராத்திரி. புண்ணிய தீர்த்தங்களுக்கு கூட கங்கா, ஜமுனா, காவேரி, கோதாவரி என்றெல்லாம் பெண்ணின் நாமங்களே சூட்டப்பட்டுள்ளன.
' தாயைப் போற்றியவன் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை
தாயை தூற்றியவன் வாழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லi'
நால்குரவர்களான மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதிலும் பெண்ணே முன்னிலைப்படுத்தப்படுகிறன்றாள். ஓளவையார் எழுதிய கொன்றைவேந்தனிலும் கூட ' அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ' என்று பெண்னே முதன்மையாகின்றாள். எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும் போது குடும்பத்தின்
திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பெண்ணின் பெருமையை எடுத்து நோக்குவோமானால் இலக்கியங்களிலும் அரசியல் வரலாறுகளிலும் பல உதாரணங்களை எடுத்து இயம்பமுடியும். அந்த வகையில் சங்க காலத்திலேயே பெண்பாற் புலவர்கள் பலர் கல்வியில் சிறந்தவர்களாகவும் தலைமைத்துவப் பண்பு மிக்கவர்களாகவும் இருந்து சாதனை படைத்துள்ளனர். உதாரணமாக ஒளவையார் காவற்பெண்டு , பாரிமகளிர், நன்முலையார், காக்கைப்பாடினியார், வெண்பூதியார், போன்ற இன்னோரன்னோரைக் குறிப்பிடலாம். மேலும் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற காவியங்களிலும் வரும் பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். கண்ணகி தெய்வமானது பெண்மைக்கு உயர்வு தருகின்றது. மாதவி மணிமேகலையின் துறவு பெண்ணியத்திற்கு மேன்மை சேர்க்கின்றது. அதே போன்று பக்தி இலக்கியமான பெரிய புராணத்தில் இருபத்தெட்டு பெண்கள் குறிப்பிடப்படுகின்றனர். இருபத்தொருபேர் நாயன்மார்களின் மனைவியராகவும், நால்வர் தாய்மார்களாகவும், உடன்பிறப்பாக ஒருவரும், மகள்மார் ஆக இருவரும் காணப்படுகின்றனர். அத்தோடு காரைக்கால அம்மையார், மங்கையற்கரசியார், இசைஞானியார், பெண் அடியார்களாக காணப்படுகின்றனர். அதுமட்டும் அல்லாது வீரத்தின் விளைநிலமாகவும் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சாவித்திரி, நளாயினி, சீதை , மண்டோதரி போன்றவர்களும் பெண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் போர்க்களத்தில் போராடிய வீரமங்கையாக ஜான்சிராணி காணப்படுகின்றார். அண்மைக்காலத்தில் கூட அரசியலில் விஜயலெட்சுமி பண்டிட் , இந்திராகாந்தி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா , சந்திரிக்கா பண்டாரா நாயக்கா போன்றோர் கூட குறிப்பிடத்தக்கவர்களாகக் காணப்படுகின்றனர். ஏன், எல்லா வற்றிற்கும் மேலாக விண்வெளிக்குக் கூட பெண்கள் சென்றுவிட்டார்கள். ஆம் கல்ப்பனா சவ்லா என்ற இந்திய பெண்மணி விண்வெளி சென்ற முதல் வரலாற்று பெண்மணியாவார்.
'பெண்என்றால்பேயும்இரங்கும்' என்பார்கள். ஏன்அவ்வாறுகூறப்பட்டது? ஒருபெண்ணானவள்பல்வேறுபாத்திரங்களைஎடுக்கின்றாள். தாயாக, தமக்கையாக, தங்கையாக, மனைவியாக,
மனைவிக்கு உதவி ஒத்தாசை வழங்கும் கணவன்மார் எத்தனை பேர் உள்ளனர்? கீழைத்தேய கவாசாரத்தின் மீதே பழிசுமத்த வேண்டி உள்ளது. மேவைத்தேய கவாசாரத்தில் இது மறுதலையாகவே காணப்படுகின்றது. மனட்சாட்சி உள்ள கணவன்மார் ஏன் ஆண்களை அண்ணளவாகப் பார்த்தால் 10மூ வீதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் மனசாட்சியை தொட்டுப்பார்த்துக் கேட்டால் பெண் இல்லாமல் என்னால் ஒரு நாட் பொழுதை கழிப்பதே சிரமம் என்று அவர்களின் ஆழ்மனம் கூறும். அப்போ அவர்கள் உதட்டினால் 'பெண் கண் போன்றவள்தான் அவள் விண்ணாக உயர்ந்து நிற்கின்றாள்' என்று கூற முடியாவிட்டாலும் கூட உள்ளத்தால் ஒவ்வொரு ஆணும் நிச்சயம் கூறுகிறார்கள், கூறுகிறார்கள் என்பது தான் உண்iமையாகும்.
பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அளவே கிடையாது. வேலைக்குச் செல்லும் பெண் அலுவலகத்தில் பல சவால்களை எதிர்கொள்கின்றாள். சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அளவே இல்லை. குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களை அவளே சமாளித்துக் கொள்கிறாள். உற்றார், உறவினார். மருமகன், மருமகள், சம்மந்தி, கணவன் என்று எத்தனையோ பேர் பேசும் அவதூறான பேச்சுக்களை தாங்கியே ஆக வேண்டிய நிலையில் பெண் சுமைதாங்கியாக காணப்படுகின்றாள். ஊதாரி, வாய்க்காரி, ஏமாளி, வஞ்சகி, கொடுசூரி, ஆட்டக்காரி என்று பல புகழ்மாரிகளை தாங்கியே ஆக வேண்டிய நிலையில் பெண் காணப்படுகின்றாள்.
' எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே ' என்று ஒரு கவிதையும் பாடி விட்டார் ஒரு கவிஞர்;. பிள்ளை சரியாக வளரா விட்டால் குற்றங் குறை யாவும் தாயான பெண் மீதே விழுகிறது. அதேவேளை அப் பிள்ளைக்கு கிடைக்கும் நற்பெயர், புகழ் அதாவது பொசிற்றிவ் அனைத்தும் தந்தையே ஏற்றுக் கொள்கிறார். பிளஸ் அப்பாவுக்கு மைனஸ் அம்மாவுக்கு என்ற நிலை தோன்றிவிட்டது. அதையும் சுமைதாங்கியான பெண் ஏற்றுக் கொண்டே விட்டாள். கணவர் ஒர் குடிகாரனாக இருந்தால் அவ்வீட்டுப் பெண் அனுபவிக்கும் கஸ்டத்தை வாயினால் கூற வார்த்தையே இல்லை. இன்று சில கணவன்மார் பெண்களை வேலைக்கு அனுப்பி விட்டு அரசாங்க வேலை என்றாலும் சரி, கூலி வேலை என்றாலும் சரி கணவன்மார் பலர் உழைத்து வீட்டைக் கவனிக்காது குடித்துக் காலத்தைக் கழிப்பவர் பலரைக் காணமுடிகிறது. சிலர் வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்கு மனைவியை அனுப்பி விட்டு அவள்
கண்ணாக விளங்கும் பெண்ணானவள் விண்ணளவு உயர்வாகவே போற்றப்படுகின்றாள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
' வாழ்க பெண்ணே! வளர்க பெண்ணியம்,
திருமதி.திலகவதி ஹரிதாஸ் (SLPS-1)
கல்லடித் திலகா