யாழ். கோப்பாய் தெற்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.
தம்பிராசா கோதைநாயகி (வயது 62) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (a)