இலங்கை விமானம் ஒன்றில் பணிபுரிந்த இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனவும், சம்பவத்தின் போது அதிகளவில் மது அருந்தியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை கொழும்பு பிரதான நீதவான் திருமதி தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டதுடன் அவருக்கு எதிராக பயணத்தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடு ஒன்றிலும் இலங்கை இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-144 இல் பயணித்த போது சந்தேக நபர் அளவுக்கு அதிகமாக விஸ்கி குடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பிறகு, அந்த விமானத்தில் பணிபுரிந்த இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
விமானத்தில் இருந்த மற்ற பயணிகளும் துன்புறுத்தப்பட்டனர்.
விமானத்தின் உத்தியோகத்தர்கள் இந்த நபரை தடுத்து நிறுத்தி விமானிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததுடன் விமானி சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளும் விமான நிலைய பொலிஸாரும் இணைந்து பயணியை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து, அவர் அதிகமாக மது அருந்தியிருந்தமை மருத்துவ அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை உத்தரவு மற்றும் பிணை நிபந்தனைகளின் பிரகாரம், அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் ஆஜராக வேண்டும். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், மறு விசாரணை திகதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு விமானப் பணிப்பெண்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விமான நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்