
FREELANCER
மட்டக்களப்பு ஏறாவூர் Hello Kids Montessori முன்பள்ளியின் கல்வி கண்காட்சி திங்கட்கிழமை 2025.03.24 காலை இடம் பெற்றது .
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்களும் சிறப்பு அதிதியாக Hello Kids Montessori முன் பள்ளி பாடசாலை பணிப்பாளர் N.ஸ்ரீகாந்த் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
பிள்ளைகளின் ஆக்கத்திறனை ஊக்குவிக்கவும் அவர்களது ஆளுமையை மேம்படுத்தவும் அத்துடன் பொது அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் இக்கண்காட்சி நிகழ்வானது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது
முன்பள்ளி பாடசாலை அதிபர் திருமதி தமயந்தி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடை பெற்ற சித்திர விஞ்ஞான கண்காட்சியில் 38 UKG மாணவர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்நிகழ்வில் சுமார் 38 சிறார்களும் பங்கு பற்றி அவர்களது கைவினைப் பொருட்களையும் , சித்திரங்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.
கண்காட்சியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பிரதம அதிதியால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன
அத்துடன் பெரும்பாலான பெற்றோர்களும் பிள்ளைகளுமாக குடும்ப சகிதம் வருகை தந்து இக்கண்காட்சியை கண்டு களித்தமை குறிப்பிடத்தக்கது.
70 சிறார்கள் கல்வி பயிலும் முன்பள்ளியில் 08 ஆசிரியர்கள் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது .