கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் சூழலுடன் பிள்ளைகளுக்கான இணைப்பினை ஏற்படுத்துதல், சமூகத்துடன் பிணைப்பினை ஏற்படுத்துதல், மரபு சார்ந்த கலைகளையும் விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்துதல் , இயற்க்கை சார்ந்த சிறுதானிய உணவுகளை அறிமுகப்படுத்தி போசாக்கு நிறைந்த உணவை உண்பதற்கு பழக்கப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை சிறார்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமையப்பெற்ற " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN" முன்பள்ளியில் இன்றைய தினம் 2025.03.27 பச்சை பசுமை நாளாக (GREEN DAY) ஆசிரியர்களாலும் , சிறார்களாலும் விமர்சையாக கொண்டாடப்பட்டது .
முன்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜனார்தனி மகிழ்நம்பி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இன்றைய நிகழ்வில் 44 சிறார்களும் 06 ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர் , நிகழ்வில் அனைவரும் பச்சை வர்ண ஆடைகளை அணிந்திருந்தது சிறப்பம்சமாகும் .
நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக சிறார்கள் அனைவரும் பச்சை வர்ணத்திலான சிறு தானிய உணவுகளை புசித்தது குறிப்பிடத்தக்கதாகும்
2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் முன்பள்ளி பாடசாலை 9வது வது ஆண்டில் கால் பதிக்க உள்ளது.