மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் இரண்டாம் வருட ஆசிரியப் பயிலுநர்களால் கற்றல் - கற்பித்தல் வளங்கள்(Teaching Aids) தொடர்பான கல்விக் கண்காட்சி .

 

 






மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் இரண்டாம் வருட ஆசிரியப் பயிலுநர்களால் கற்றல் - கற்பித்தல் வளங்கள்(Teaching Aids) தொடர்பான கல்விக் கண்காட்சி இடம்பெற்றது (05.03.2025). இதில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி திரு.T.கணேசரத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பதிதிகளாக உப பீடாதிகளும், விரிவுரை இணைப்பாளர்களும், கல்விப் பீடத்தின் துறைத் தலைவர்களும், சிரேஷ்ட விரிவுரையாளர்களும், விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். இக்கண்காட்சி நிகழ்வுகள் ஆரம்பக் கல்வி மாணவர்களின் பொறுப்பு விரிவுரையாளர்களான திரு S.ஜெயராஜா, திரு.K.கமலதாசன் ஆகியோரின் வழிகாட்டலில் கீழ் ஆசிரியப் பயிலுநர்களால் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.