முன்னர் கதிர்காமக்
கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் திகதி
கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 10 ம் திகதி தீர்த்த உற்சவத்துடன்
நிறைவு பெற இருந்தது.
தற்போது திகதி மாற்றத்தையடுத்து
2025
கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் 26ம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பிக்கப்பட்டு யூலை 10ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது
என அறியப்படுகிறது.
யாழ்.செல்வச்சந்நதி
ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59
நாள் பாதயாத்திரை யூ ன் மாதம் 26ஆம் திகதி கதிர்காமத்தை சென்றடையும்.
அதற்கான முன் ஏற்பாடு ஒழுங்கு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப் புனித பாதயாத்திரைக் குழுவில் பக்திபூர்வமான முறையில் பங்குபெறவிரும்பும் அடியவர்கள் 0778386381
0763084791
ஆகிய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.
( வி.ரி. சகாதேவராஜா)