இலங்கையில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்துகளுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
சுகாதார
மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த
சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிதா
சிறிதுங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.