காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி 104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

 



காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் கபொத உயர் தர பரீட்சை பெறுபேறுகளின்படி 104 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அவர்களில் மூன்று மாணவர்கள் மருத்துவத்துறைக்கும், நான்கு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று கல்லூரி அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார்.

 அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு வந்து அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து நன்றிகளை பகிர்ந்து கொண்டார்கள். மாணவர்கள் மாலை சூட்டப்பட்டு வரவேற்கப் பட்டார்கள். பாராட்டப்பட்டார்கள்.

மருத்துவத் துறைக்கு மாணவர்களான எல். சரண் 3 ஏ, ரி.கஜினி ஏ 2பி ஜே.ஹேசுதன் 2 ஏபி பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள் .

பொறியியல் துறைக்கு என். தனுசாந்த் 3 ஏ, வி.விருட்சிகன் 3 ஏ, ரி.யுகேஷன் ஏபிசி, ஆர்.மோனிஷன் 2 பிசி சித்திகளைப் பெற்று தெரிவாகி இருக்கின்றார்கள்.

கலைத் துறையில் என்.ஹீனுஸ்திகா கே.நிதுராஜ் ஆகியோர் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளார்கள்.

 ( வி.ரி. சகாதேவராஜா)