மட்டக்களப்பு மாவட்டத்தில் 134 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகி உள்ளன- மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன்

 


 

மட்டக்களப்பு  மாவட்டத்தில் 134  தேர்தல் விதிமுறை மீறல்  சம்பவங்கள்   பதிவாகி உள்ளன,  இதுவரை  எவ்வித  வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை,  வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பெற்றுக்கொள்ளலாம்    இதற்காக ஞாயிற்றுக்கிழமை    விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது  என மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்துள்ளார் .
மட்டக்களப்பு மாவட்டத்தில்   தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ள அரச அதிகாரிகள் மற்றும் போலீசார் தபால் மூல வாக்களிப்பில் அமைதியான முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றும் நாளையும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது , இதனை தவறவிட்ட வர்களுக்காக எதிர்வரும் திங்கட் கிழமை செவ்வாய்க் கிழமை வாக்களிக்க  சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது .
இடம் பெற  உள்ள     உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இதுவரை   கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் சென்று அதனை பெற்றுக் கொள்ள முடியும்  என மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜேஜே முரளிதரன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  இவ்வாறு  தெரிவித்தார்