பட்டலந்த வதை முகாம் தொடர்பில் அப்போது கைத்தொழில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க தனது அதிகார வரம்பை மீறி அதிகாரதுஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆவண ஆதாரங்களை சுட்டிக்காட்டி கருத்துரைத்துள்ளார்.
1983 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் போதே வன்முறைகள் ஆரம்பமானது எனவும் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கு அப்போதைய ஜே.ஆர்ஜெயவர்தனவும் அந்த அரசாங்கமுமே முதன்மைக் காரணி என இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்துள்ளார்.
அதேவேளை ரணில் விக்ரமசிங்கவும் அப்போதைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நலிஸ் தெல்லகொடவும் இணைந்து பட்டலந்த வீடமைப்புத் திட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் மறைமுகமாக பொறுப்பு கூறகடமைப்பட்டுள்ளனர் என ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சித்திரவதைகள் இடம்பெற்ற வீடுகளில் பி2 என்ற வீடு ரணில் விக்ரமசிங்கவிற்கு சொந்தமானது எனவும் ஆணைக்குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதோடு, பி8 என்ற வீடு அப்போதைய பொலிஸ் அதிதியட்சகர் டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு சொந்தமானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு மக்கள் விடுமுதலை முன்னணி அழிவுகளை மேற்கொண்டதாகவும் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அல்ஜசீராவிற்கு ரணில் தெரிவித்திருந்தார் எனவும் குறிப்பிட்டார்.
எனினும் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரங்களுகளில் மக்கள் விடுதலை முன்ணியினர் ஒருவரேனும் சம்பந்தப்பட்டிருந்ததாக சாட்சியங்கள் எதுவும் இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்கவே சட்டத்ஆனால்ணிகளுடன் உடன்பட்டிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புட்டிருந்ததாக தெரிவித்திருக்கின்றார். இதுவே ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அதிகாஆனால்துஸ்பிரயோகங்கள் எல்லாமே ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டமைக்கான சகல ஆதாரங்களையும் விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் அவர் இப்போது அல்ஜசீராவிற்கு சென்று மக்கள் விடுதலை முன்னணியினர் மீது குற்றம் சுமத்துகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்