குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

 


2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியானது.

இந்நிலையில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  

இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

அத்துடன் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா,  வணிகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

மேலும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த லெசந்து ரன்சர குமாரகே,  பௌதீக விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்படி, குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி நவோத்யா,  உயிர் முறைமைகள் தொழில்நுட்பம் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

மேலும், கம்பஹா, ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செனாலி சமத்கா,   கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன்  உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் 2ஆம் இடத்தை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவன் யமுனானந்தா பிரணவன் பிடித்தார். 

அவரது சகோதரன் யமுனானந்தா சரவணன் நாடளாவிய ரீதியில் 5ஆம் இடத்தை பிடித்தார். 

இவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தாவின் இரட்டை புதல்வர்கள் ஆவர்.

கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து தில்மித் தஹாநாயக்க கணிதப் பிரிவில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

அதே பாடசாலையின் மாணவர் நவிந்து தினெத் தென்னகோன் கணிதப் பிரிவில் நாட்டிலேயே ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.