மட்டக்களப்பு ,கல்லடி வேலூர் அருள்மிகு ஸ்ரீ பத்ர காளி அம்மன் தேவஸ்தான
வருடாந்த திருச்சடங்கு 2025.04.04 அன்று வெள்ளிக்கிழமை திருக்கும்பம்
வைத்தலுடன் ஆரம்பமாக இருக்கிறது.
சடங்குகள் 07 நாட்கள் இடம்பெற
இருக்கின்றன .தினமும் உச்சிகால பூஜை பிற்பகல் 2.30 கும் ,அர்த்தசாம பூஜை
இரவு 10.30 கும் இடம் பெரும்.
பிரதம பூசகர் திரு கு கிருஷ்ணகுமார்
மற்றும் உதவி பூசகர்கள் ,திரு சுவேந்திரன் ,திரு கருணாகரன் மற்றும் இ
.லக்ஷ்மன் ஆகியோரின் தலைமையில் விசேட பூஜைகள் ,ஆராதனைகள் .ஊர்காவல்
பண்ணுதல் மற்றும் பலி திட்டமிடுதல் ஆகியன இடம் பெற இருக்கின்றன.
2025.04.10
அன்று வியாழக்கிழமை காலை விநாயகர் பானை வலம் வருதல் மற்றும் ,பொங்கல்
நிகழ்வும் , மாலை 6.00 மணிக்கு தேவாதிகள் , பக்த அடியார்கள் மஞ்சள் பூசி
கடல் நீராடிய பின்னர் புனித தீ மிதிப்பு வைபவத்துடன் அருள்மிகு ஸ்ரீ
பத்ர காளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருச்சடங்கு இனிதே நிறைவுறும்.
2025.04.12 சனிக்கிழமை பொதுச்சடங்கில் வைரவர் பூஜையும் இடம் பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற்
குறிப்பு -ஆலயத்தில் நித்திய ,நைமித்திய மற்றும் பூரணை ,நவராத்ரி ,கேதார
கௌரி விரத அனுஷ்டான பூஜைகள் யாவும் தேவஸ்தான பிரதம குரு பிரம்ம ஸ்ரீ நா .
வாசுதேவன் குருக்கள் அவர்களினால் நடாத்த பட்டு வருகின்றது.
ஆதித்தன்