FREELANCER
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியும் , அம்பாறை பண்டாரநாயக்க தேசிய மகளிர் கல்லூரியும் இணைந்து மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கலை கலாச்சார மற்றும் பாரம்பரிய புரிந்துணர்வு விழா ஒன்றை முன்னெடுத்திருந்தது .
விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி N. தர்மசீலன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற விழாவுக்கு மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி S.ரவிராஜா பிரதம அதிதியாக பங்கேற்றார் .
கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கல்வி பணிப்பாளர் திரு .R.J. பிரபாகரன் கலந்து கொண்டார்.
விசேஷ அதிதியாக அம்பாறை பண்டாரநாயக்க தேசிய மகளிர் கல்லூரி அதிபர் திருமதி W.E. ஸ்ரீயானி வீரகோன் கலந்து சிறப்பித்தார் . ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை வரவேற்றல் , மங்கள விளக்கேற்றல் , இறை வணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன .
விழாவில் மாணவிகளின் தமிழ் , சிங்கள கலாச்சார நிகழ்வுகள் , நடனம் , பாடல்கள் சிறப்பாக இடம் பெற்றன.
அதன் பின்னர் பாடசாலை வளாகத்தில் சிங்கள கலாச்சார உணவுகள் , சிற்றூண்டிகள் அதிதிகளுக்கும் மாணவியருக்கும் , ஆசிரியர்களுக்கும் பரிமாறப்பட்டன .
சமூக ஒருமைப்பாட்டையும் ,மாணவர்களுக்கிடையே கலை கலாச்சார மற்றும் பாரம்பரிய புரிந்துணர்வையும் வளர்க்கும் உயரிய நோக்கில் இவ் விழா முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .