சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 சிவாநந்தா வசமானது.

















மட்டக்களப்பு இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 விவாதப் போட்டியின் இறுதி நிகழ்வு கடந்த 31 மார்ச் 2025 அன்று பழைய மாணவர் சங்க தலைவர் மு. சதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவரும் கிழ‌க்கு மாகாண பிரதி பிரதம செயலாளருமான (நிர்வாகம்) N. வில்வரட்ணம் அவர்களும் சிறப்பு அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் S. மகேந்திரகுமார் அவர்களும், கௌரவ அதிதியாக கல்லூரியின் அதிபர் K. பகிரதன் அவர்களும் அழைப்பு அதிதிகளாக A.S. யோகராஜா மற்றும் K. தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் அதிபர் சாரங்கபாணி அவர்களின் பாரியார் திருமதி சாரங்கபாணி, கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி கனகசிங்கம், BBC இனுடைய முன்னாள் மூத்த ஊடகவியலாளர் சீவகன் பூபாலரட்ணம், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 விவாதப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையும் மட்/ சிவானந்தா வித்தியாலயமும் தெளிவாகின. இதில் வெற்றி பெற்று மட்/ சிவானந்தா வித்தியாலயம் சாரங்கபாணி சொல்லாடல் களம் 2025 வெற்றிக் கிண்ணத்தை வென்றது.

வெற்றியாளர்களுக்கான வெற்றிக் கேடயம் சாரங்கபாணி அவர்களது மனைவி திருமதி. மகேஸ்வரி சாரங்கபாணி அவர்களால் சிவானந்தா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

முதலாம் இடத்தை சிவானந்தா வித்தியாலயமும் இரண்டாம் இடத்தை மட்/ வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையும் மூன்றாம் இடத்தை புனித மிக்கேல் கல்லூரியும் பெற்றுக் கொண்டனர்.