மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படும் இரத்ததான நிகழ்வானது தொடர்ச்சியாக இவ்வருடமும் 8வது தடவையாக ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது இன்று திங்கட்கிழமை (21.04.2025) மு.ப 8.30 மணி தொடக்கம் பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.