
மட்டக்களப்பு முகத்துவார வீதி கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய
கர்மாரம்பம் கடந்த 6.04.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமானது
2025.04.08
மற்றும் 2025.04.09 ஆகிய இரண்டு நாட்களும் பக்த அடியார்களின் கரங்களினால்
எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது, மட்டக்களப்பின்
பல்வேறு பாகங்களில் இருந்து ஏராளமான பக்த அடியார்கள் எண்ணைக்காப்பு
சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .
2025.04.10 ம் திகதி
வியாழக்கிழமை முகூர்த்த வேளையில் தேவஸ்தான ஆதீன கர்த்தாவும் பிரதான
குருவும் ஆகிய சிவ ஸ்ரீ த.ஜெகநாத சிவாச்சாரியார் தலைமையில்
சர்வபோதகாச்சாரியார்கள், யாகசம்ரட்சகர்கள் , பிரதிஷ்டா குருக்கள்
, மூர்த்திப சிவாச்சாரியார்கள், வேத பாராயண சிவாகம
சிவாச்சாரியார்கள், சர்வசாதகாசிரியர்கள் . சிறப்பு குருக்கள் மார்கள் ,
ஆகியோரின் பங்கேற்றலுடன் புனராவர்தன அஷ்ட பந்தன பஞ்ச குண்டபக்ஷ திரிதள
ராஜா கோபுர மகா கும்பாபிஷேகம் இடம் பெற்றது .
அன்றைய தினம் மட்டக்களப்பு
பிரபல வர்த்தகரும் , ஈஸ்ட் லகூன் விடுதி உரிமையாளருமான தேசபந்து மு
.செலவராசா அவர்களின் அனுசரணையில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட பக்த
அடியார்களின் தாக சாந்தியை போக்கும் முகமாக சர்பத் குளிர்பானம்
விநியோகிக்கப்பட்டது .