விவசாய ஊக்குவிப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக, அம்பாறை பிரதி விவசாயப் பணிப்பாளர் அதிகார பிரதேசங்களில், ஒரு பிடி மண் – விவசாய நிலத்துக்கு” வளமான சிறுபோகம் வளமான எதிர்காலம் – 2025 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட, விவசாய உற்பத்தி முயற்சியாளர்களை ஒன்றிணைக்கும் சந்தை நாள் நிகழ்வு காரைதீவு விவசாய விரிவாக்கல் அலுவலகத்தில் சனிக்கிழமை (05) இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தில் பணிபுரியும் மகளிர் விவசாய விரிவாக்கல் பிரிவினால் ஏற்பாட்டில்,அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் (மாகாண இடை) கலாநிதி கே.ஏ.கே.எஸ் லக்மால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்திப் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், நிந்தவூர் வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ருக்மன் சோமரத்ன, சம்மாந்துறை, தம்பிலுவில், அட்டாளைச்சேனை வலயங்களுக்கான உதவி விவசாயப் பணிப்பாளர்கள், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவரானி சிவசுப்பிரமணியம், காரைதீவு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி பி. பிரதீப் மற்றும் அம்பாறை மாவட்ட மகளிர் விவசாய விரிவாக்கல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி ஜீவிதா சிந்தூரியன் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் மற்றும் சமநல சேவை உத்தியோகத்தர் கரையோர விவசாய விரிவாக்கல் நிலையங்களுக்கு உட்பட்ட விவசாய உற்பத்தி முயற்சியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்ட விவசாய உற்பத்தி முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.