மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு நடாத்தும் மட்டு முயற்சியாண்மை-2025




 




























FREELANCER


மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி 09.04.2025 காலை   பிரதேச  செயலக வளாகத்தில்  இடம் பெற்றது.  
இந்த  விற்பனை கண்காட்சியை  மண்முனை வடக்கு  பிரதேச செயலாளர்  திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் திறந்து வைத்தார்..
மண் முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான திருமதி  s  . சுதாகரன் திருமதி லக்ஷன்யா  மற்றும் கணக்காளர் ஆகியோரும் கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தனர் .
   பிரதேச செயலக   அபிவிருத்தி    பிரிவின் உத்தியோகத்தர்களின்  ஒழுங்கு படுத்தலின் கீழ் கண்காட்சியும் விற்பனையும் முன்னெடுக்கப்பட்டது .
கண்காட்சியில் சிறு  தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
பெருமளவிலான வாடிக்கையாளர்கள் செயலகத்திற்கு வருகைதந்து   ஆர்வத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை  ஆர்வத்துடன்     கொள்வனவு செய்ததை  காணக்கூடியதாக இருந்தது .