5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்டாயம் என்ற சுற்றுநிரூபத்தை வெளியிட்டது அரசு.

 


5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்டாயம் என்ற சர்ச்சைக்குரிய சுற்றுநிரூபத்தை வெளியிட்டது அரசு
“5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்டாயம்” என்ற   சுற்றுநிரூபத்தை வெளியிட்டது நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு.
ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணங்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரி (Coroner) களுக்கு Ministry of Justice & Integration அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவித்துள்ளது.
மரண விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், இது இலங்கையில் குழந்தை மரண பகுப்பாய்வின் ஒரு அத்தியாவசிய அங்கம் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி Sunday times வெளியிட்டுள்ள செய்தியில் அமைச்சின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
இந்த நடைமுறை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களின் பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அத்தகைய மரணங்களைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
“இந்த மரணங்களுக்கு பின்னால் உள்ள காரணங்களைப் படிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பிரேத பரிசோதனை முடிவுகள் பயன்படுத்தப்படும், இதன் மூலம் இம்மரண வீதங்களைக் குறைக்க முடியும்.” என்பது அவர்களது கருத்தாக இருந்தது.
மற்றொரு தகவலின்படி சமீபத்தில் தாய் மரண விகிதத்தில் குறைவு அடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் ஆரோக்கிய குறிகாட்டிகளை (Health index) மேம்படுத்துவதற்கான அதிகாரிகளின் முயற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதுவரை, ஒரு குழந்தையின் மரணம்
01. சந்தேகத்திற்குரிய தீங்கு (Suspected Harm)
02. சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் (Suspected Circumstances)
03. அல்லது விபத்துகளை
உள்ளடக்கியிருந்தால் மட்டுமே
திடீர் மரண விசாரணை அதிகாரியினால் (Coronor) மரண விசாரணை (Inquest) மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்படும்.
எனினும், புதிய சட்டப்படி, மருத்துவர்கள் ஏற்கனவே மரணத்தின் (நோய்க்) காரணத்தை தீர்மானித்திருந்தாலும், ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடற்கூற்று பரிசோதனை (Postmortem) தேவைப்படும்.
Sunday times செய்திகள் மேலும் தெரிவிக்கையில்
இந்த கொள்கையை பல வைத்திய நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரியதாக இல்லாத மரணங்களுக்கு எப்போதும் பிரேத பரிசோதனை தேவையில்லை என்பதைக் குறிப்பிட்டு, இது தேவையற்ற ஊடுருவல் என்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒவ்வொரு பிரேத பரிசோதனைக்கும் அண்ணளவாக ரூ. 15,000 செலவாகும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்
இவ்வாறான Routine postmortem செய்ய வேண்டும் என நிர்பந்திப்பது பணம், நேரம் மற்றும் Resources வீண் விரையமாவதற்கு வழிவகுக்கும்.
“இத்தகைய கடுமையான நடவடிக்கைகளைக் கோருவதற்கு முன், இந்த செயல்முறையின் ஒவ்வொரு படியிலும் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுடன் (stakeholders) அவர்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உள்ளீடு (Technical input) இல்லாமல் சுற்றறிக்கைகள் மூலம் உத்தரவுகளை வழங்கக்கூடாது,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: Sunday times
தமிழில்: Ziyad Aia
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசாங்கத்தை பொறுத்தவரையில் இது ஒரு தேவையில்லாத ஆணி.
ஏற்கனவே மரணத்துக்கு காரணமான நோய் நிர்ணயம் செய்யப்பட்டதின் பின் Postmortemக்கு உத்தரவிடுவது Pathological Postmortem வகையறாவாக மாறும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் குழந்தையின் பெற்றோர் / பாதுகாவலரின் அனுமதி இல்லாமல் போஸ்மோட்டம் செய்ய முடியாது. (ஆனால் இந்த சுற்றுநிரூபம் அதனை Override பண்ணுவதாக அமையலாம்.)
ஒரு குழந்தையின் மரணத்துக்கான காரணம் ஏற்கனவே (நோய்) நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் அதன் பின் செய்யப்படும் கட்டாய Postmortem இனால் கிடைக்கும் பிரயோசனம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே இது சட்டரீதியான பல சர்ச்சைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும். இந்த சுற்று நிரூபத்தை அரசு ஏனைய நிபுணர்களுடன் கலந்துரையாடி மீள் பரிசோதனை செய்வது கட்டாயமானது